மணிப்பூரைச் சேர்ந்த மாணவர் ஸிங்க்ரன் கேங்கோ (33) கடந்த மாதம் முனைவர்
பட்டத்துக்கான ஆராய்ச்சி கல்விக்காக டெல்லிக்கு வந்தார். டெல்லியில் வாடகை
வீட்டில் தங்கிருந்த அவர் புதன்கிழமை இரவு இறந்த நிலையில் இருந்ததை பார்த்த
வீட்டு உரிமையாளர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
இதனை அடுத்து அங்கு வந்த போலீஸார் கேங்கோவின் உடலை பிரேத பரிசோதானைக்காக
அனுப்பி வைத்தனர். இறந்த நிலையில் இருந்த கேங்கோவின் கழுத்து பகுதியில்
கத்தியால் அறுத்த அடையாளம் இருப்பதாகவும், அறை முழுவது ரத்த வெள்ளத்தில்
காணப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், அறையில் இருந்த பொருட்கள் எவையும் திருடு போகவில்லை என்றும்,
இதனால் இது திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என்றும் டெல்லி போலீஸார்
தங்களது முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், நாட்டின் பல பகுதிகளில்
தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாவதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக
தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட கிழக்கு மாநில மாணவர்
அமைப்பு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக