துபாய்: உலகின் புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றான துபாய் குளோபல் வில்லேஜ்
கண்காட்சி நேற்று நவம்பர் 6-ல் துவங்கியது. இக்கண்காட்சி ஏப்ரல் 11, 2015
வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள சுற்றுலா
பார்வையாளர்களை கவரும் வகையில் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு
புதியதாக அமெரிக்கா,ஈராக்,கம்போடியா உள்ளிட்டவற்றுடன் சேர்த்து 70 நாடுகள்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளன. 5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்
பங்கேற்பார்கள் என்றும் 3500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது
என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களது நாடுகளின் கலை மற்றும் கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையில் பெவிலியன்களை ஏற்படுத்தியுள்ளதோடு வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள பல்வேறு பொருட்களும் இங்கு கிடைக்கும். இம்முறை குளோபல் வில்லேஜ் நடைபெறும் இடம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு புதியதாக அனிமல் லேன்ட்,3டி வீடுகள்,வரலாற்றை விளக்கும் இடங்கள் என பார்வையாளர்களை கவரும் வகை புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.
துவக்க நாளான நேற்று பார்வையாளர்கள் நுழைவு கட்டணமின்றி இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள நாட்களில் நுழைவு கட்டணம் பெறப்பட உள்ளது துவக்க நாள் நிகழ்ச்சியில் வாணவேடிக்கைகள்,நாடுகளின் கலாச்சார நடனங்கள் என கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 157 நாட்கள் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் நிறைவு நாள் வரை அந்தந்த நாடுகளின் கலாச்சார நடனங்கள்,சிறுவர் சிறுமியர்களுக்கு நிகழ்ச்சிகள் என 12,000-க்கும் மேற்பட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக