போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் தேடப்பட்டு வந்த யூனியன் கார்பைடு அதிபர்
ஆண்டர்சன் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவால் தேடப்பட்டு
வந்த வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவில் மரணமடைந்து விட்டதாகவும் தகவல்கள்
வெளிவந்துள்ளன. கடந்த 1983ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி போபால் யூனியன்
கார்பைடு நிறுவனத்தில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் 3,787 அப்பாவி
மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் நோயால் மாண்டனர்.
விஷவாயு கசிந்து மக்கள் உயிரிழந்தது தொடர்பாக ஆண்டர்சன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 1983-ம் வருடம் டிசம்பர் 7-ம் தேதி போபால் வந்த ஆண்டர்சன்னை காவல்துறை கைது செய்தது. பின்னர் ஜாமீன் பெற்று அமெரிக்கா சென்ற ஆண்டர்சன் தலைமைறைவானார். தலைமைறைவானதையடுத்து ஆண்டர்சன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்தும் ஆண்டர்சன்னை ஒப்படைக்க அமெரிக்கா மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்த ஆண்டர்சன் உடல்நலக் குறைவால் தற்போது உயிரிழந்திருப்பதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக