வியாழன், அக்டோபர் 30, 2014

ஹலால் பொருட்களை அதிகமாக இறக்குமதி செய்கின்றது ஜப்பான்..

மலேசியாவிலிருந்து சுகாதாரமான ஹலால் உணவு பொருட்கள் இறக்குமதி செய்யகூடிய நாடுகளில் தற்பொழுது ஜப்பானும் இணைந்துள்ளது.


இது பற்றி மலேசிய வேளாண்துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறும் போது, “எங்களது நாட்டில் ஹலால் உணவுபொருட்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல, வெகுஜன சந்தை பொருட்களாகவும் உள்ளது,

“சிபா” மலேசிய ஹலால் பொருட்களின் முக்கிய நுழைவாயில் என அடையாளம் காணப்பட்டுள்ளது, அடுத்த வருட ஆரம்பத்தில் 1800க்கும் மேற்பட்ட AEON பேரங்காடிகளில் ஹலால் பொருட்கள் சந்தைபடுத்தபடும்.

2020ல் ஜப்பானில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்பவர்களாகவும், பார்வையாளர்களாகவும் அதிகமான முஸ்லிம்கள் அந்நாட்டுக்கு வருகைபுரிவார்கள், எனவே ஹலால் பொருட்களை சந்தைபடுத்த ஆரம்பிப்பதற்கு இதுவே உகந்த நேரமாகும்.

இரு நாடுகளுக்கும் இடையில் ஹலால் பொருட்கள் வர்த்தக பரிமாற்றம் செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படுமென்றும், அது பொருட்களின் சுத்தத்தையும், ஹலால் தன்மையையும் தொடர்ந்து கண்காணித்து வரும் எனவும் அவர் கூறினார்,

முன்னதாக மலேசியாவிலிருந்து அதிகமான நாடுகள் ஹலால் பொருட்கள் இறக்குமதி செய்கின்றன, அவற்றில் சீனா, துபாய், பஹ்ரைன், கத்தார் போன்ற நாடுகளும் அடங்கும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக