மத்திய அரசுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் ஜனவரி மாதம் டெல்லியை நோக்கி இரண்டு ராணுவ வாகனங்கள் வந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் கேட்கப்பட்ட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் அவசியமில்லாதது. இந்தியாவில் ஜனநாயகம் மிக வலிமையான நிலையில் உள்ளது. பாகிஸ்தானில் நிலவும் ராணுவ சூழ்நிலை இங்கு இல்லை.
இராணுவம் மற்றும் அரசாங்கத்துக்கு இடையேயான சர்ச்சைக்கு எந்த இடமும் இல்லை என கூறினார். மேலும், யோகா குரு ராம்தேவிடம் தொலைபேசி மூலம் மன்னிப்பு கேட்டது குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-
நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். என் மகளின் திருமணத்துக்கு அழைப்பு விடுப்பதற்காகவே நான் அவரிடம் பேசினேன். ராம்தேவின் புதிய அமைப்பு ஏற்கனவே தடம்புரண்டு விட்டது. அதில் நான் சேர்வதாக இல்லை.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக