செவ்வாய், ஏப்ரல் 10, 2012

அணுஉலையை மூடும் வரை போராட்டம் நீடிக்கும்: உதயகுமார் பேட்டி


 கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை அறப்போராட்டம் தொடரும் என போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் தெரிவித்தார். 

இடிந்தகரையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-
 அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த 18 பேருக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதுபோல முகிலன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவருக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்கும் என நம்புகிறோம். அனைவர் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
 அணுஉலையை மூடும் வரை இப்போராட்டம் நீடிக்கும். கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் இடிந்தகரைக்கு வருவதாக தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 முல்லை பெரியாறு அணை பிரச்சினை வேறு, அணுஉலை எதிர்ப்பு போராட்டம் வேறு. இலங்கை அமைச்சர் ஒருவர் அணுஉலையால் தங்கள் நாட்டுக்கும் ஆபத்து எனப் பேசியுள்ளார். கூடங்குளம் அணு உலையை மனதில் கொண்டே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அணுஉலை பிரச்சினை என்பது சர்வதேச பிரச்சினை. எனவே, இதுதொடர்பாக கருத்து சொல்ல இலங்கை அமைச்சருக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக