ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவுக்கு வருகை தரும் தமது முடிவை பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ஒருமுறைக்கு இருமுறை பரிசீலிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் எழுதப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முசாரப் பதவி வகித்த காலத்தில் இந்திய பயணம் மேற்கொண்டார். பின்னர் அஜ்மீர் தர்காவுக்கும் சென்று வழிபட்டார். பாகிஸ்தான் திரும்பிய அவருக்கு பதவி பறிபோனது.
இந்தியாவுக்கு தற்போது வருகை தர உள்ளதாக பாகிஸ்தான் அதிபர் சர்தார் கூறியுள்ளார். இந்தியாவை விரோதமாக பார்க்கின்ற சர்தாரி, இந்தியாவில் உள்ல தர்காவில் வந்து வழிபட்டால் எப்படி அவரது பிரார்த்தனை பலிக்கும்..
பர்வேஸ் முஸாரப்புக்கு நடந்ததுபோல சர்தாரிக்கும் பதவி பறிபோய்விடப் போகிறது.. எதற்கும் அஜ்மீர் போய் வழிபாடு நடத்துவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை சர்தாரி யோசித்துப் பார்ப்பதே நல்லது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையில் பயணமாக சர்தாரி நாளை வருகை தருகிறார். அஜ்மீருக்கு செல்வதற்கு முன்பாக டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக