ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

மோடியை கிருஷ்ணராக சித்தரிக்கும் பா.ஜனதா விளம்பரத்துக்கு காங்கிரஸ் கண்டனம்


குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை கிருஷ்ணராக சித்தரித்து வெளியான பா.ஜனதா விளம்பரத்துக்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. குஜராத் மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
. இந்தநிலையில் அம்ரேலி மாவட்ட பா.ஜனதா தலைவர் பாரத் காம்தார், உள்ளூர் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் ஒன்றை கொடுத்து இருந்தார். அந்த விளம்பரத்தில் குஜராத் முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் முக்கிய தலைவருமான நரேந்திர மோடி, கிருஷ்ணராக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார். குஜராத் மாநில பா.ஜனதா தலைவர் ஆர்.சி.பால்டு அர்ஜுனராகவும், மேலும் சில தலைவர்கள் பாண்டவர்களாகவும் அந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டு உள்ளனர். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் நரேந்திரமோடி, இந்த விளம்பரத்தின் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். நடைபெற இருக்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, இதுபோன்ற நடவடிக்கையில் மோடி ஈடுபட்டு வருதாக, குஜராத் காங்கிரஸ் தலைவரான நரஹரி அமீன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
"நரேந்திரமோடி, மக்களை முட்டாளாக்கி வருகிறார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். கிருஷ்ணராக தன்னைக் காட்டிக் கொள்ளும் மோடி, அடுத்து ராமர், ரஹீம் போன்ற அவதாரங்களையும் எடுப்பார்" என்றும், அப்போது அவர் குற்றம் சாட்டினார். ஆனால், காங்கிரசின் இந்த விமர்சனத்தை குஜராத் மாநில பா.ஜனதா கட்சி பொருட்படுத்தவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக