பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று தமிழகமெங்கும் முஸ்லிம் இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 10:30 மணியளவில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துறைமுகம் அருகில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
த.மு.மு.க. வின் சார்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதன் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையேற்று நடத்தினார்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதன் தலைவர் பாக்கர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், யாதவ மகாசபை தலைவர் டாக்டர் தேவநாதன்,மனித உரிமைகள் கழகத்தின் சார்பில் டி.எஸ்.எஸ். மணி மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்பாட்டங்களில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக