நெல்லை : ஜெயலலிதா ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என நினைத்த மக்களுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளதாக காதர்முகைதீன் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்முகைதீன் நெல்லையில் அளித்த பேட்டி: தமிழகத்தில் பால், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சார கட்டணத்தையும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கட்டண உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு நிதி
கொடுக்கவில்லை என மாநில அரசு தெரிவிப்பது முரணானது.
ஜெயலலிதா ஆட்சியில் மாற்றம் வரும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது. 5 ஆண்டுகள் முடிவில் கிடைக்க வேண்டிய அவபெயர் 6 மாதத்தில் ஜெயலலிதாவிற்கு கிடைத்துவிட்டது. நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு காயிதேமில்லத் பெயர் சூட்ட வேண்டும். ஏப்ரல் மாதத்தில் இந்தியா முழுவதுமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க மாநாடு கேரளாவில் நடக்கிறது. காஷ்மீரிலிருந்தும் இதில் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் 3.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக மாற்ற வேண்டும். வரும் 10ம் தேதி மதுரையில் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. பெரியாறு அணை பிரச்னையை இரு மாநிலங்களின் பிரச்னை என்ற அடிப்படையில் அணுக வேண்டும். மேலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக