திங்கள், டிசம்பர் 12, 2011

விருதுநகரில் அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது நடவடிக்கை

Tn Government Busவிருதுநகர்: விருதுநகரில் அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 

தமிழகத்தில் பேருந்து கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும்,சமூக அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.



இந்த நிலையில் தனியார் பேருந்துகளிலும், அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் அரசு அறிவித்ததை விட அதிகக் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இது பொது மக்களை மிகவும் பாதித்தது.

அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டார். இதில் அதிகமாக கட்டணம் வசூலித்த அரசு பேருந்து நடத்துநர்களிடம் பேருந்து பெர்மிட் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக நோட்டீஸ் கொடுத்தார்.

இது குறித்து நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டதை பன்படுத்தி சில தனியார் பேருந்துகளிலும், அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளிலும் அரசு அறிவித்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் வந்தது.

இந்த புகாரின் பேரில் சோதனை செய்தபோது அதிக கட்டணம் வசூலித்த 57 பேருந்துகளின் பெர்மிட் மீது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக