செவ்வாய், நவம்பர் 15, 2011

அமெரிக்க அவமதிப்பை மறப்போம் : அப்துல் கலாம் பெருந்தன்மை!!!

கோல்கட்டா:""அமெரிக்க விமான நிலையத்தில் எனக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து, எதுவும் பேச விரும்பவில்லை. இச்சம்பவத்தை மறந்து விட வேண்டியது தான்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பெருந்தன்மையுடன் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த செப்டம்பரில் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். பயணத்தை முடித்து விட்டு, நாடு திரும்பும்போது, நியூயார்க் விமான நிலையத்தில், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். அவரது கோட், ஷூ ஆகியவற்றை கழற்றும்படி கூறி, சோதனையிட்டனர். இது பற்றிய தகவல் வெளியானதையடுத்து, இந்திய அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அமெரிக்க அதிகாரிகள் இதற்காக மன்னிப்பு கேட்டனர்.

கோல்கட்டாவுக்கு நேற்று வந்திருந்த அப்துல் கலாமிடம், இதுகுறித்து கேட்டபோது, "பேசுவதற்கு தகுதியான சம்பவம் அல்ல அது. எனவே, அதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அமெரிக்காவில் நடந்த சம்பவத்தை மறந்து விட வேண்டியது தான்' என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக