செவ்வாய், நவம்பர் 15, 2011

புத்தூரில் திரண்ட மக்கள் வெள்ளம்!!!

மங்களூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநிலம் சார்பாக புத்தூரில் சமூக நீதி மாநாட்டிற்கான பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தது சமூக நீதிக்காக தாங்களும் பாப்புலர் ஃப்ரண்டோடு இணைந்து போராட தயார் என்பதையே உணர்த்துகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களில் நடைபெற்று வரும் பிரச்சாரங்களில் அதிக அளவில் பங்கெடுத்து பாப்புலர் ஃப்ரட்ண்டிற்கு தங்களது பேராதரவை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஃபாசிஸ கட்சியான பா.ஜ.க ஆளும் மாநிலமான கர்நாடகாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு பிரச்சாரங்களில் ஆரவ்த்தோடும் உத்வேகத்தோடும் கலந்து கொள்கின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 12ஆம் தேதி அன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த புத்தூரில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தப்போவதாக பாப்புலர் ஃப்ரண்ட் அறிவித்திருந்தது. ஆனால் அரசாங்கமும் காவல்துறையும் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி மறுத்தது. மாநாட்டிற்கான பிரச்சாரம் பிரம்மாண்டமான் அணிவகுப்பு மற்றும் பேரணியுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. துங்கம்மா தெரேனா என்ற இடத்திலிருந்து தொடங்கிய பேரணி மற்றும் அணிவகுப்பு பொதுக்கூட்டம் நடைபெற்ற இடமான  கில்லி மைதானத்தை வந்தடைந்தது.
பொதுமக்களிடையே தங்களது அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் சமூக நீதியை பெறுவதற்கான போராட்ட களத்தில் பங்கெடுக்கச்செய்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். சமூக நீதி பெற வேண்டும் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல மாறாக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கிடைக்கவேண்டும். வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்த நாட்டில் சமூக நீதி மலர வேண்டும் என்பதே சுதந்திர போராட்ட தியாகிகளின் கனவாக இருந்தது. இந்த நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குறிப்பிட்ட சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை நிலை பிந்தங்கியே இருக்கின்றது. இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டத்தின் படி ஒவ்வொரு குடிமகனுக்கும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி கிடைக்கவேண்டும். கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 42 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள். வடஇந்தியாவில் இருக்கின்ற 8 மாநிலங்களில் இருக்கின்ற நிலை தென் ஆப்பிரிக்காவில் இருக்கின்ற 24 மாநிலங்களின் நிலையை விட மோசமானதாகும்." என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் கூறினார்.

பிரபல கட்டுரையாளரான சிவிசுந்தர் கலந்து கொண்டு பேசியதாவது பிரம்மணிச கொள்கையும் காலனி ஆதிக்க சக்திகளும் தான் நமது தேசத்திற்கு பெரும் எதிரியாய் திகழ்கிறது. இந்துமதம் என்கிற பெயரில் ஆர்.எஸ்.எஸ் பிரம்மணிச கொள்கைகளை பரப்பி வருகிறது. நமது நாட்டில் உள்ள முற்போக்கு சிந்தனை கொன்ட அனைத்து சக்திகளும் இவர்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். சமூக நீதியை நமது நாட்டில் நிலை நிறுத்துவதற்காக எல்லா தரப்பு மக்களும் தங்களது பங்களிப்பை பதிவு செய்ய வேண்டும் எனக்கூறினார்.
கர்நாடக மாநில தலைவர் இலியாஸ் தும்பே இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சமூகத்தில் உள்ள எல்லா முஸ்லிம் அமைப்புகளும் சமூகத்தின் வலிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தங்களது ஆதரைவ தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாப்புலர் ஃப்ரண்ட் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் மற்றும் இன்னபிற பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காகவும் போராடிவருவதாக அவர் தெரிவித்தார்.
செய்யது இபுராஹிம் தங்கல், பேராயர் வில்லியம் மார்டிஸ், பாப்புலர் ஃப்ரண்டி துணைத்தலைவர் அப்துல் வாஹித் சேட், தலித் பேந்த்ர்ஸ் ஆஃப் இந்தியாவின் தலைவர் நாகராஜ், பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் நூருல் அமீன், என பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக