புதன், நவம்பர் 16, 2011

இஸ்ரேலின் தாக்குதலில் ஃபலஸ்தீன் போலீஸ் அதிகாரி பலி

காஸ்ஸா:காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத்தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
வடக்கு காஸ்ஸாவில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
காஸ்ஸாவின் கடற்படை பாதுகாப்பு அதிகாரியான முஹம்மது அல் கைலானி(வயது 20) என்பவர்தாம் இஸ்ரேலின் அக்கிரம தாக்குதலில் கொல்லப்பட்டவர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள கடற்படை மையத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக