வியாழன், நவம்பர் 17, 2011

புதிய சர்ச்சையில் இத்தாலி விளம்பரம்


போப்ஆண்டவர்-இமாம், ஒபாமா-சீன அதிபர் தலைவர்கள் முத்தமிட்ட படங்களால் சர்ச்சைரோம்: இத்தாலி நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள விளம்பரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டைசேர்ந்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் பெனிட்டன். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தன்னுடைய வர்த்தகத்தை விளம்பரப்படுத்துவதற்காக கடந்த 1990-ம் ஆண்டிலிருந்து பத்திரிகை மற்றும் தனது இணையதளத்தில் புதுமையான விளம்பரங்களை வெளியிட்டு வந்துள்ளது. இந்த விளம்பரங்களால் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பா‌ஸை உதட்டுடன் உதடு முத்தம் தரும் போட்டோவை வெளியி்ட்டுள்ளது. மேலும் பிரான்ஸ்அதிபர் நிகோலஸ் சர்கோஸியும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் மேற்கண்டவாறு முத்தம் தரும்படியும் போட்டோவை வெளியிட்டிருந்தது. தற்போது சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் மற்றும் அமெரி்க்க அதிபர் ஒபாமாவும் உதடுடன் உதடு சேர்த்து முத்தம் தருவது போன்று படத்‌தை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தி்ன் இத்தகைய விளம்பரத்தை நிறுத்த வேண்டுமென இத்தாலியின் கத்த‌ோலிக்‌க தொலைக்காட்சி நிறுவனம் கண்டித்துள்ளது குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக