செவ்வாய், நவம்பர் 15, 2011

புகையில் புதையும் உயிர்கள்

ஜகர்தா; சிகரட்டிற்கு எதிரான  தனது புதிய பிரசாரத்தில் உலகில் அதிகமான முஸ்லிம்களை கொண்ட இந்தோனேசியாவின் இரண்டாவது இஸ்லாமிய இயக்கமான முஹம்மதியா தனது கல்வி மற்றும் சுகதார நிறுவனங்களில் புகைபிடித்தலை முழுமையாக தடை செய்துள்ளது.

 
        நேற்றிலிருந்து(திங்கள்) நங்கள் எங்களது பிரசாத்தை துவக்கி உள்ளோம்.எங்களுடைய கல்வி,சுகதார நிலையங்கள் மற்றும் வியாபார நிலையங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகிய அனைத்தும் புகை பிடிக்க தடை செய்யப்பட இடமாக அருவிக்கப்பட்டுள்ளது என்று அதன் சுகதார துறையிற்கான தலைவர் சபிக்  அ .முஃனி,ஜகர்தா க்லோப்பிற்கு அளித்த பெட்டியில் தெரிவித்துள்ளார்.
 மேலூர் அவர் கூறுகையில் ,இது இளைய சமுதாயத்தை சிகரட்டின் அபாயத்திலிருந்து பாதுகாக்கவும் மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கவும் என்றார்.
    முஹம்மதியா 500-க்கு  மேற்பட்ட மருத்துவமனை மற்றும் கிளினிக் போன்ற சுகதார நிலையங்களை நடத்திவருகிறது.அதொபோன்று ,சிறார்களுக்கான கல்வி நிலையம் உட்பட உயர்நிலை பள்ளி வரை 15000-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களை நடத்திவருகிறது.இது தவிர்த்து 200 -க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறது.மேலும் 300 -க்கும் அதிகமான அநாதை இல்லங்களையும் நடத்துகிறது.
   முஹம்மடியாவை பொறுத்தவரையில் தங்களது கல்வி நிலையங்களில் புகை பிடிப்பதற்கான தடையை பல வருடங்களுக்கு முன்னாலே நடைமுறைபடுதியுள்ளது.
   இந்தோனேசியா உலகில் சீனா மற்றும் இந்தியாவிற்கு அடுத்தபடியாக  முன்றாவது மிகப்பெரிய சிகரட் விற்பனையாகும் நாடு என்பது குறிப்பிட தக்கது.1 -டாலருக்கு ஒரு சிகரட் பாக்கெட் கிடைக்கும் அளவிற்கு உலகிலே மிக மலிவான விலை.60 -வது மில்லியன்(ஆறு கோடி) இந்தோனேசிய மக்கள் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு வருடமும் 200 -ஆயிரம்(இரண்டு லட்சம் ) இந்தோனேசியர்கள் புகை பிடிப்பதால் வரும் நோய்களால் இறக்கிறார்கள்.

 புகைபிடிப்பதால் வரும் நோய்களால் வருடம்தோறும் 6 -லட்சம் மக்கள் உலகம் முழுவதும் இறக்கிறார்கள்.ஏறக்குறைய 500-பில்லியன் அளவிற்கான பணம் உலக பொருளாதத்திளிருந்து செலவு செய்யப்படுகிறது என WCTOH-இன் சமிபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தற்போதைய நிலை தொடர்ந்தால் இருபத்தொராம் நூற்றாண்டில் புகைபிடிக்கும் பழக்கம் 1-பில்லியன்(நூறு கோடி) உயிரை பறிக்கும் என WHO(உலக சுகதார இயக்கம்) எச்சரித்துள்ளது.source -onislam.net  & islamonine.com           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக